பதிவு செய்த நாள்
16
செப்
2013
10:09
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், திருக்காலிமேடு திருவாத்தமன் பவானிஅம்மன் கோவிலில், திருவிழா நடந்தது. காஞ்சிபுரம், திருக்காலிமேடு பகுதியில் உள்ள திருவாத்தமன், பவானியம்மன், பெரியபாளையத்தம்மன் கோவில் ஆடி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். நேற்று காலையில் அம்மனை, கும்பத்தில் சுமந்து வீதி வலம் வந்தனர். அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையல் செய்தனர். காப்பு கட்டிய நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், இரவு நடந்த தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டனர். இரவு, 10:00 மணிக்கு அம்மனை வர்ணணையுடன் கும்ப படையல் நிகழ்ச்சி நடை பெற்றது.