திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் திருவோணத்தை முன்னிட்டு வாமனர் வெண்ணைக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித் தார். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பெருமாள் கோவிலில் மூலவராக இருக்கும் உலகளந்த பெருமாள் சன்னதிக்கு பின்புறத்தில் வாமனர் சன்னதி உள்ளது. தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத இந்த சிறப்பு பெற்ற இத்தலத்தில் ஆவணி திருவோணத்தை முன் னிட்டு காலை வாமனருக்கு விசேஷ திருமஞ்சனம், மாலையில் வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் தீபா ராதனை, இரவு சகஸ்ரதீபம், தீபபிரதிஸ்டை, விஷ்னு சகஸ்ரநாமம் நடந்தது.ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளாவைச் சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டனர்.