பதிவு செய்த நாள்
20
செப்
2013
11:09
பாவூர்சத்திரம்: மகிழ்வண்ணநாதபுரம் மகிழ்முத்துமாரியம்மன், ஆதிசிவன் காசிலிங்க சுவாமி கோயில் கொடை விழா 11 நாட்கள் நடக்கிறது. கடந்த 8ம் தேதி திருவிழா வில்லிசையுடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினசரி நித்தியபூஜை, வில்லிசை நடக்கிறது. 3ம் திருநாளில் காலை 7 மணிக்கு கால்நாட்டுதல், மாலை 6 மணிக்கு அன்னதானம் நடந்தது. வரும் 24ம் தேதி 10ம் திருநாளில் காலை 9 மணி முதல் 7 வில்லிசை குழுவினர். நையாண்டி மேளம், செண்டாமேளம், பேண்ட் வாத்தியம், மகுட ஆட்டம், கனில் ஆட்டம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு குற்றாலம் புனித நீர் கொண்டு வருதல், பூஜை, மாலை 6 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. 9 மணிக்கு இன்னிசை கச்சேரி, இரவு 1 மணிக்கு அம்மன் பூக்குழி இறங்குதல், வாணவேடிக்கை, இரவு 3 மணிக்கு மாவிளக்கு எடுத்தல் நடக்கிறது. 11ம் நாள் நிறைவு நாளில் அம்மன் வீதியுலா, முளைப்பாரி எடுத்தல், மஞ்சள் நீராடுதல் நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.