பாவூர்சத்திரம்: கருத்தலிங்கபுரம் வைகுண்ட சுவாமி நிழல்தாங்கல் திருவிழா 10 நாட்கள் நடந்தது.கடந்த 6ம் தேதி காலை தாமரைசெல்வன் கொடியேற்றி திருவிழாவை துவக்கி வைத்தார். வைகுண்டமணி திருஏடு வாசித்தார். 8ம் திருவிழாவில் மாலை 5 மணி திருக்கல்யாணம், இரவு 7 மணிக்கு அன்னதர்மம், 9ம் திருவிழா இரவு 7 மணிக்கு அன்னதர்மம், 10ம் திருவிழா நிறைவு நாளில் மதியம் 12 மணிக்கு உச்சிபடிப்பு, பால்தர்மம், மாலை 4 மணிக்கு பட்டாபிஷேகம் நடந்தது. மாலை 5 மணிக்கு வாகனம் வீதியுலா செண்டாமேளத்துடன் நடந்தது. இரவு அன்னதர்மம், அதிகாலை 5 மணிக்கு கொடி இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை அய்யா வைகுண்டர் மக்கள் சபை அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.