பதிவு செய்த நாள்
20
செப்
2013
11:09
திருவேங்கடம்: சங்கரன்கோவில் தாலுகா பனையூரில் வெங்கிடாசலபுரம் காளியம்மன்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா மூன்று நாட்கள் நடந்தது. வெங்கிடாசலபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதல் நாள் காலை விக்னேஷ்வர பூஜையுடன் ஆரம்பமானது. அன்று மாலை முதற்கால யாக சாலை பூஜைகள், வாஸ்துசாந்தி, பிரவேச பலி, திரவ்யாகுதி, தீபாராதனை நடந்தது. இரண்டாம் நாள் காலை விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள். இரவில் யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. மூன்றாம் நாள் காலை விக்னேஷ்வர பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை, ரஷாபந்தனம், திரவ்யாகுதி, பின்பு நாடிசந்தனம், பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ராதானம், கும்பம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, அர்ச்சனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம், இரவு வில்லிசை நடந்தது. ஏற்பாடுகளை வெங்கிடாசலபுரம் காளியம்மன் கோயில் டிரஸ்ட், நிர்வாக குழு உறுப்பினர்கள், உபயதாரர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.