பதிவு செய்த நாள்
20
செப்
2013
11:09
தூத்துக்குடி: தூத்துக்குடி தருவைக்குளம் தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தூத்துக்குடி தருவைக்குளம் தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா இன்று(20ம் தேதி) மாலை 6.45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவில் இன்று மங்களகிரி டிவைன் மெர்சி தியான சேவியர் மறையுரை ஆற்றுகிறார். நாளை வேம்பார் தூய ஆவி ஆலய பங்குதந்தை பென்சன் மறையுரை ஆற்றுகிறார். தொடர்ந்து வரும் 29ம் தேதி வரை மறையுரை மற்றும் அன்பியங்கள் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை 5.45 மணிக்கு திருப்பவனி தொடர்ந்து திருப்பலி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு ஜெபமாலை நவநாள் வழிபாடும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை மற்றும் கற்கருணை ஆசீரும் நடக்கிறது.3ம் திருவிழாவன்று காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், காலை.6.45 மணிக்கு திருப்பவனி மற்றும் திருப்பலியும் நடக்கிறது. அன்று காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை தியானம் நடக்கிறது. தொடர்ந்து குருக்கள் பாவசங்கீர்த்தனம் கேட்கின்றனர். வரும் 26ம் தேதி 7ம் திருவிழாவன்று இரவு 9 மணிக்கு புனிதரின் சப்பரபவனி நடக்கிறது. வரும் 28ம் தேதி 9ம் திருவிழாவினை முன்னிட்டு காலை 6 மணிக்கு புதுநன்மை திருப்பலி, மாலை 6. 30 மணிக்கு ஜெபமாலை திருவிழாவும், மாலை ஆராதனையும் நடக்கிறது. வரும் 29ம் தேதி 10ம் திருவிழாவினை முன்னிட்டு காலை 4 மணிக்கு தேரடித்திருப்பலியும், காலை 6 மணிக்கு திருவழிõ கூட்டு பாடல் திருப்பலியும், காலை 8.ம0 மணிக்க தேர்பவனியும் நடக்கிறது. மதியம் நவநாள் நன்றி திருப்பலி, மாலை4 மணிக்கு ஞானஸ்நான திருப்பலியும், மாலை 7 மணிக்கு திருவிழா நிறைவு நற்கருணை ஆசிரும்நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குதந்தை ஜோசப் இசிதோர், துணைபங்குதந்தை குழந்தைராஜன் மற்றும் அருட்சகோதரிகள், கட்டளைக்காரர்கள் ஆகியோர் செய்துவருகின்றனர்.