வேப்பங்காடு புனித இருதய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2013 11:09
மெஞ்ஞானபுரம்: மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள வேப்பங்காடு புனித இருதய மாதா ஆலைய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.வேப்பங்காடு புனித இருதய மாதா ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இலங்கநாதபுரம் பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ் கொடியேற்றத் திருப்பலி வைத்து கொடியேற்றிவைத்து திருவிழாவை தொடங்கி வைக்கிறார். நவ நாட்களில் மாலையில் திருப்பலி நடக்கிறது. பாலர் சபை, நற்கருணை வீரர் சபை, திருக்குடும்ப சபை, அமலோற்பவ மாதா சபை, இறை மக்கள் புனித அந்தோனியார் ஜாண்போஸ்கோ இளைஞர் சபையினர் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். 28ம்தேதி 9ம் திருவிழாவில் மாலை ஜெபமாலை சிறப்பு மாலை ஆராதனையும்,மாதாவின் சொரூப சப்பர பவனியும், பத்தாம் திருவிழா அன்று காலை யில் புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 30ம் தேதி காலை அசன திருப்பலி நடக்கிறது. திருப்பலியில் புனித சூசையப்பர் சபையினர் கலந்து கொள்கின்றனர். மாலையில் அசன விழாவும் இரவு கலை நிகழ்சிகளும் நடக்கிறது.