அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு கண்காணிப்பு கேமரா தேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2013 11:09
ரிஷிவந்தியம்:ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கண்காணிப்பு கேமரா பொருத்த அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.ரிஷிவந்தியத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் அர்த்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர்.இரவு நேரத்தில் கோவிலில் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் இது வரை 3 முறை திருடிச்சென்றுள்ளனர். குற்றவாளிகளை போலீசார் கண்டு பிடிக்கவில்லை. இதனால் கோவிலின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.கோவிலின் உள்ளே ஆயிரம் ஆண்டுகள் பழமையான விலைமதிக்க முடியாத ஐம்பொன் சிலைகள் உள்ளன. இவைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. கோவிலின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.