""ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவில், முக்கிய இடங்களில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு சமூக விரோதிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படும் என கீழக்கரை டி.எஸ்.பி.,சோமசேகர் தெரிவித்தார். அவர் கூறியதாவது; ஏர்வாடி சந்தனகூடு திருவிழா தினத்தன்று வழக்கத்தை விட கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். முக்கிய இடங்களில் ரகசிய கேமரா மற்றும் சீருடை அணியாத போலீசார் மூலம் சமூக விரோதிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படும். போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில், கிழக்குகடற்கரை சாலையில் பெட்ரோல் பங்க் அருகே வாகனங்கள் நிறுத்தப்படும். மக்கள் நடந்து செல்லும் பாதையில் சாலையோர கடைகள் இருந்தால் அகற்றப்படும், என்றார்.