கோபுரத்தில் செடி வளர்வதால் சிற்பங்கள் உடையும் அபாயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2013 10:09
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூரில் கோவில் கோபுரத்தில் செடி வளர்வதால் சிற்பங்கள் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. திருவெண்ணெய்நல்லூரில் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் கோவிலின் வளர்ச்சி பாதித்துள்ளது. மங்களாம்பிகை கோவில் கோபுரத்தில் அரச மரசெடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளதால் சிற்பங்கள் உடையும் நிலை உள்ளது. கிருபாபுரீஸ்வரர் கோவிலிலுள்ள ஐந்து நிலை கோபுரத்திலும் செடிகள் வளர்ந்துள்ளன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோபுரத்தின் தெற்கு பகுதியிலுள்ள சிமென்ட் மூலம் செய்யப்பட்டிருந்த பெரிய யாளி உடைந்து விழுந்தது. இதுவரையில் சரி செய்யப்படாத நிலையில், தற்போது செடிகள் வளர்ந்திருப்பதால்சிற்பங்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் தலையிட்டு, கோவிலின் கோபுரத்தில் வளர்ந்துள்ள மரச் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.