புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவில் 10ம் ஆண்டு விழா மற்றும் நிறுவனர் சிதம்பர குருக்கள் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, விநாயகர், சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம், பூஜைகளுக்கு பின் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 500 பேருக்கு அன்னதானம், 200 ஏழைகளுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீதாராம குருக்கள் மற்றும் அறங்காவல் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.