Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
1,000 ஆண்டு பழமையான நாணயங்கள் ... சபரிமலை மண்டல மகரவிளக்கு: 17-ல் தேவசம் அமைச்சர்கள் ஆலோசனை! சபரிமலை மண்டல மகரவிளக்கு: 17-ல் தேவசம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காந்தி கோவிலில் சிறப்பு பூஜை: பொதுமக்கள் தரிசனம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 அக்
2013
10:10

கோபிசெட்டிபாளையம்: காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு, கவுந்தபாடி காந்தி கோவிலில், காந்தி சிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. ஈரோடு மாவட்டம், கவுந்தபாடி அருகே செந்தாம்பாளையத்தில், தேசப்பிதா மகாத்மா காந்தி அறக்கட்டளை சார்பில், 1997ல் காந்தி, கஸ்தூரிபாய் கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலில் காந்தி, கஸ்தூரிபாய் ஆகியோருக்கு தனித்தனியாக சிலைகள் அமைக்கப்பட்டு, தினமும் பூஜை செய்யப்படுகிறது. காந்தி பிறந்த அக்., 2ம் தேதியான நேற்று, இக்கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பெருந்தலையூர், பவானி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், பால், பஞ்சாமிர்தம், இளநீர், எலுமிச்சை, தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட, ஒன்பது வகையான திரவியங்களைக் கொண்டு, அபிஷேகம், ஆராதனை நடந்தன. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காந்தி கோவிலில், பல பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் ஏராளமானவர்கள் வந்து தரிசனம் செய்து, மரியாதை செலுத்தினர். அதேநேரம், காந்திக்கு என்று உள்ள ஒரே கோவிலில், காந்தி ஜெயந்தியான நேற்று, காங்கிரஸ் பிரமுகர்கள் உட்பட எந்த அரசியல் கட்சி பிரமுகர்களும் வந்து, காந்தியை வணங்கி பெருமை சேர்க்கவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
பாலக்காடு: சிருங்கேரி சாரதா பீட சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா தொடங்குகிறது. பாலக்காடு - ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar