பதிவு செய்த நாள்
03
அக்
2013
10:10
குருக்ஷத்திரம்: அரியானா மாநில பாரம்பரிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக, 1,000 ஆண்டுகள் பழமையான, 391 நாணயங்கள், குருக்ஷ?த்திர பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குருக்ஷத்திரத்தில் வசிக்கும், ஓ.பி.கர்க், பல்கலைக்கழக துணைவேந்தரை கடந்த செவ்வாய்க்கிழமையன்று, சந்தித்து, தன்னிடம் இருந்த, பழமையான நாணயங்களை ஒப்படைத்தார். கர்க், கடந்த 15 ஆண்டுகளாக, சேகரித்த நாணயங்களை, அரியானா பாரம்பரிய அருங்காட்சியகத்திற்கு வழங்கியுள்ளார். அவற்றில், குஷானர்கள், கனிஷ்கர், சுல்தான், 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த, பெரோஸ் ஷா துக்ளக், முகமது துக்ளக், ஹுமான்யூ மற்றும் கிழக்கிந்திய கம்பெனி காலம் என, கி.மு., 75ல் இருந்து, 1947 வரையிலான, 150க்கும் அதிகமான நாணயங்களை வழங்கியுள்ளார். நாடு விடுதலைக்குப் பிறகு, மத்திய அரசு வெளியிட்ட, அனைத்து ரூபாய் மதிப்பு நாணயங்களையும் இவர் அளித்து உள்ளார்.