பதிவு செய்த நாள்
05
அக்
2013
11:10
பழநி: நவராத்திரி விழாவை முன்னிட்டு பழநி மலைக்கோயில் தங்கரதப்புறப்பாடு, அக்.5 முதல் 13 வரை,தொடர்ந்து 9 நாட்களுக்கு நிறுத்தப்படுகிறது. பழநி மலைக்கோயிலில் நாள்தோறும் இரவு 7 மணிக்கு மேல், தங்கரதப்புறப்பாடு நடக்கிறது. கந்த சஷ்டி, தீபகார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், நவராத்திரி போன்ற விழாக்காலங்களில் தங்கரதப்புறப்பாடு நிறுத்தப்படுவது வழக்கம். அக். 5ல் காலை பெரியநாயகியம்மன் காப்புகட்டுதல், உச்கால வேளையில், திருஆவினன்குடி, மலைக்கோயிலில் காப்பு கட்டுதலுடன் நவராத்தி விழா துவங்கி, அக்.13 வரை நடக்கிறது. விழாவை நடக்கும் ஒன்பது நாட்களுக்கு தங்கரத புறப்பாடு நடைபெறாது.