அனைத்தையும் படைக்கும் பிரம்மதேவன், தானே நவ வடிவங்களுடன் தோன்றி, ஒன்பது சிவலிங்கங்களை தனித்தனி கோயில்களில் வைத்து வழிபட்ட இடம், ஆந்திராவில் உள்ள அலம்பூர். பிரம்மதேவனின் அந்த நவ வடிவங்களைப் பார்ப்போம்!
குமார பிரம்மன் : திருமாலுக்கு மகனாகப் பிறந்து, படைப்புத் தொழிலை நன்கு ஆற்ற தவம்புரியும் நிலையைக் குறிக்கிறது.
அர்க்க பிரம்மன் : சூரிய மண்டலத்தில் விளங்கும் பிரம்மன். சிவாசனத்தின் ஓர் அங்கமாக விளங்கும் சூரிய மண்டலத்தில் அர்க்க பிரம்மன் பூஜிக்கப்படுகிறான்.
வீர பிரம்மன் : அறியாமை மிகுந்த அரக்கர்களோடு பிரம்மன் போரிட்ட கோலத்தைக் குறிக்கிறது. பால பிரம்மன் : அத்ரி-அனுசுயா தம்பதியரிடம் குழந்தையாக தவழ்ந்த கோலம்.