பதிவு செய்த நாள்
09
அக்
2013
03:10
பழநி: வன்னிகா சூரனை வதம் செய்ய, பராவேல் புறப்பாட்டை முன்னிட்டு, பழநி மலைக்கோயில் சன்னதி, அன்று(அக்.13ல்) பகல் 1.30 மணி முதல் இரவு 11 மணிவரை நடை சாத்தப்படும். என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வன்னிகா சூரன் வதத்தை முன்னிட்டு, பழநி மலைக்கோயிலில், மாலை 5.30 மணிக்கு நடைபெறும், சாயரட்சை பூஜை, முன்னதாக பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கிறது. பூஜை முடிந்தவுடன் மலைக்கோயிலிலுள்ள பராவேல், படிப்பாதை வழியாக பெரியநாயகியம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். பின், அங்கிருந்து மாலை 5 மணிக்குமேல், தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி பராவேல், கேடயத்தோடு கோதை மங்கலத்திற்கு புறப்பட்டு, அங்குள்ள கோதையீஸ்வர ஆலயம் முன் வன்னிகா சூரன் வதம் நடக்கிறது. முத்துகுமாரசுவாமி பெரியநாயகியம்மன் கோயிலுக்கும், பராவேல் மலைக்கோயில் வந்த பின், அர்த்தசாம பூஜை நடக்கிறது. இதன் காரணமாக, அன்று (அக்.13ல்) பிற்பகல் 1.30 மணி முதல் இரவு 11 மணி வரை மலைக்கோயில் சன்னதி நடை சாத்தப்படும். என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.