பதிவு செய்த நாள்
09
அக்
2013
06:10
அன்பே பெரிதென மதிக்கும் மிதுனராசி அன்பர்களே!
உங்கள் ராசியில் இருக்கும் குருபகவான் நன்மை தரும் இடத்தில் இல்லை. ஆனால் அவர் அக். 22ல் வக்கிரம் அடைகிறார். ஒருகிரகம் வக்கிரம் அடையும் போது அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. எனவே, அவரால் கெடுபலன்கள் நடக்காது. மாறாக நன்மைகளைத் தருவார். கேது மேஷத்தில் இருப்பதால், காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செவ்வாய் 3ம் இடத்தில் இருப்பது மேலும் உங்களை மேம்படுத்தும். பக்தி உணர்வு மேம்படும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். இதன்காரணமாக நீங்கள் நினைத்த பொருளை வாங்க இருக்கிறீர்கள். வங்கி கையிருப்பு அதிகரிக்கும். உங்கள் ராசிநாயகன் புதன் 5ம் இடத்தில் இருப்பது அவ்வளவு சிறப்பு அல்ல. அவரால் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம். அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். இதன்காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்துவிட்@டா@ம என்ற ஆதங்கத்தில் பணியில் கவனக்குறைவு வரலாம். ஆனாலும், புதன் பார்வை சாதகமாக அமையும். அதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும். அக்.24 முதல் நவ.14 வரை புதன் வக்கிரம் அடைக்கிறார். இந்த காலத்தில் அவரால் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சனி, ராகுவோடு சூரியன் இணைந்து இருக்கிறார். அவரால் பகைவர்களின் தொல்லை அதிகரிக்கும். உடல் உபாதை வரலாம். நட்பு கிரகமான சுக்கிரன் 6-ம் இடமான விருச்சிகத்தில் இருப்பதால், முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். பெண்கள் வகையில் தொல்லைகள் வரலாம். 5-ம் இடத்தில் இருக்கும் கிரகங்களால் நன்மை கிடைக்காது என்றாலும் அவர்கள் மீது குருவின் பார்வை படுவதால் பாதிப்பு ஏற்படாது. இதனால் இந்த மாதம் நன்மைகள் அதிகம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
நல்ல நாட்கள்: அக்.18,19,20,24,25,29,30,நவ.5,6,7,8,13,14, 15,16
கவன நாட்கள்: நவ.9,10 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,5 நிறம்: சிவப்பு, பச்சை
வழிபாடு: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியையும், சனிக்கிழமை ஆஞ்சநேயரையும் வழிபட்டு வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். புதன்கிழமை பசுவுக்கு கீரை, பழம் கொடுங்கள்.