பதிவு செய்த நாள்
10
அக்
2013
10:10
கோவை: தினமலர் நாளிதழ், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் யு"டிவி நிறுவனங்கள் சார்பில் நவராத்திரி "கொலுவிசிட் நிகழ்ச்சி சிங்காநல்லூர் மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் நேற்று நடந்தது. லட்சுமிநரசிம்மர், விளக்குதீபம், நிலா கிருஷ்ணர், பிரதோஷ வழிபாடு, இமயமலை பர்வதம், இந்திய விமானப்படை, அஷ்டலட்சுமி, மழைநீர் சேகரிப்பு, கிராமத்து விவசாயம் குறித்த விழிப்புணர்வு, 18ம்படி அய்யப்பன் பூஜை, பல்வேறு விதமான விநாயகர்களின் கச்சேரி, சேதுபந்தனம், ஜடாயுமோட்சம், பாற்கடல், காளிய நர்த்தனம், சிவபெருமான், நந்தி, லட்சுமி அலங்காரம், மகாபலிபுரம், கோகுலத்தில் கண்ணன், "காடு வளர்ப்போம்; வனவிலங்கு, மலைவாழ் மக்களை காப்போம், குற்றால அருவி, முதுமலை காப்பகம், "கிராமங்களே நாட்டின் வேர், கைலாய மலை, பழநிமலை உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களில் விதவிதமான கொலுப்பொம்மைகளை வாசகியர் காட்சிப்படுத்தியிருந்தனர். இதில், சிறப்பாக கொலு அமைத்த சிங்காநல்லூரை சேர்ந்த ஞானாம்பாள், ஸ்ரீமதி மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த சுமதி உள்ளிட்டோருக்கு, "ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இன்று பீளமேடு, பாப்பநாயக்கன்பாளையம் பகுதிகளில், "கொலு விசிட் நிகழ்ச்சி நடக்கிறது.