தினமலர் செய்தி எதிரொலி.. திருப்புல்லாணி கோயில் பளிச்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2013 10:10
கீழக்கரை: தினமலர் செய்தி எதிரொலியாக, திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் நடை பாதை கடைகள் அகற்றப்பட்டன. திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் நடை பாதையில் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால் பக்தர்கள் நடந்து செல்ல சிரமம் அடைவதாக நேற்று, தினமலர் நாளிதழில் போட்டோவுடன் செய்தி வெளியானது.கோயில் நிர்வாகத்தினர், கடைகள் அமைக்க தடை விதித்தனர். இதை தொடர்ந்து கோயில் வாசல் "பளிச் ஆனது. கடைகளுக்கு முன் உள்ள பந்தல்களையும் அப்புறப்படுத்த, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.