பதிவு செய்த நாள்
10
அக்
2013
10:10
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கொலு கண்காட்சியை காண பக்தர்கள் அலைமோதுகின்றனர்.நவராத்திரி விழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோயிலில் "சர்வம் பக்திமயம் என்ற பெயரில் கொலு கண்காட்சி நடக்கிறது. முதலில் மாலையில் மட்டும் கொலு காண பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆடி வீதிகளில் பக்தர்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு, 100 பேர், 100 பேர் என பகுதி பகுதியாக அனுப்பப்பட்டனர். கூட்டம் அதிகளவு வந்ததால், பலர் கொலுவை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதையடுத்து, கொலுவை அனைவரும் கண்டுகளிக்க வசதியாக தற்போது, தினமும் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கொலுவை காண அனுமதிக்கப்பட்டனர். போலீசார் மற்றும் கோயில் ஊழியர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர். அம்மன், சுவாமியை வழிபட பொதுதரிசனம், கட்டண தரிசனம் (ரூ.20, ரூ.50, ரூ.100) என இருவகை உண்டு. கொலு கண்காட்சியை பார்க்க வரும் பக்தர்கள் அம்மன், சுவாமி சன்னதிக்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், பொதுதரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழாவின் ஐந்தாம் நாளான நேற்று, புட்டுக்கு மண்சுமந்து, வைகை கரையில் படுத்து உறங்கி, பாண்டிய மன்னனிடம் பிரம்பால் அடிவாங்கிய லீலை அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.