மதுரை காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில் நவராத்தி விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2013 11:10
மதுரை: தெற்கு மாசி வீதி காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் 5ம் தேதி சனிக்கிழமை, காமாட்சி அம்மன் நவராத்திரி அலங்கார கொலு அமரப்பெற்று பரம்பரை ஸ்தானிகர் திரு. கே.எம்.எஸ். ராஜரெத்தினம் அவர்களால் நவராத்திரி விழா அலங்காரம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தினசரி மாலை 6.30 மணிக்கு அலங்காரம் செய்து நடை திறக்கப்படும். சுமார் இரவு 10.00 மணிக்கு அலங்காரம் தீபாராதனைகள் நடைபெறும்.
நிகழ்ச்சி நிரல்
5.10.13 மாலை 6.30 முதல் 10.30 மணி வரை காமாட்சி அம்மன் 6.10.13 மாலை 6.30 முதல் 10.30 மணி வரை பார்வதிக்கு பரமேஸ்வரர் அனுக்கிரஹித்தல் 7.10.13 மாலை 6.30 முதல் 10.30 மணி வரை கால் மாரி ஆடிய தாண்டவம் 8.10.13 மாலை 6.30 முதல் 10.30 மணி வரை வீரபத்ரர் 9.10.13 மாலை 6.30 முதல் 10.30 மணி வரை பார்வதி திருக்கல்யாணம் 10.10.13 மாலை 6.30 முதல் 10.30 மணி வரை ஷண்முக ஜெனனம் 11.10.13 மாலை 6.30 முதல் 10.30 மணி வரை துர்க்கா பிரஸன்னம் 12.10.13 மாலை 6.30 முதல் 10.30 மணி வரை மஹிஷாஸூரமர்த்தினி 13.10.13 மாலை 6.30 முதல் 10.30 மணி வரை சரஸ்வதி சிவனை பூஜித்தல் 14.10.13 மாலை 6.30 முதல் 10.30 மணி வரை குதிரை வாகனம் புறப்பாடு 15.10.13 மாலை 6.30 முதல் 10.30 மணி வரை பிரத்யங்கிரா தேவி 16.10.13 மாலை 6.30 முதல் 10.30 மணி வரை ராஜராஜேஸ்வரி 17.10.13 மாலை 6.30 முதல் 10.30 மணி வரை பாவாடை நெய்வேத்யம் 18.10.13 காலை, இரவு அன்னாபிஷேகம் சாந்தாபிஷேகம்