கமுதி: கமுதி தாலுகா, கோவிலாங்குளம் அருகே உள்ளது பறையன்குளம் கிராமம். இந்த ஊரில் உள்ள தர்மமுனீஸ்வரர் கோயில் கிரில் கேட்டை உடைத்து சனிக்கிழமை இரவு மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த 250 கிராம் வெள்ளிக் கிரீடம், 15 கிலோ எடையுள்ள பித்தளை மணிகள். ரூ 15 ஆயிரம் உண்டியல் பணம், பட்டு அங்கவஸ்திரங்கள் உள்ளிட்ட பொருள்களை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கோவிலாங்குளம் போலீஸில் புகார் செய்தனர். கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.