பதிவு செய்த நாள்
16
அக்
2013
10:10
அவிநாசி: ஐந்து கால்களுடன் அவிநாசிக்கு வந்த மூன்று கன்றுக்குட்டிகளை, பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம், சோலாம்பூரை சேர்ந்தவர் ராம்பாபா தேவ். இவரது வீட்டில் உள்ள பசு மாடு கன்றுகள் ஈன்றன. மூன்று கன்றுக்குட்டிகள், தலா ஐந்து கால்களுடன் பிறந்தன. இந்த அதிசய கன்றுக்குட்டிகளை, நாடு முழுவதும் தனது ஆட்டோவில் அழைத்துச் சென்று பொதுமக்களுக்கு காண்பித்து வருகிறார். வழக்கமாக உள்ள நான்கு கால்களுடன், ஐந்தாவதாக கழுத்தின் மேற்பகுதியில் ஐந்தாவது கால் ஒட்டி கொண்டுள்ளது. இந்த அதிசய கன்றுக்குட்டிகள், நேற்று காலை அவிநாசிக்கு கொண்டு வரப்பட்டன. தாலுகா அலுவலகம் எதிரில், பொதுமக்கள் பூஜை செய்தனர். தகவலறிந்த பலர், ஐந்து கால் கன்றுக்குட்டிகளை பயபக்தியுடன் கும்பிட்டுச் சென்றனர். கன்றுக்குட்டிகளை பராமரித்து வரும் தேவ் கூறுகையில், ""சிவபெருமானின் அம்சமாக உள்ள ஐந்து கால்களுடைய கன்று குட்டிகளை, நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, யாத்திரை நடத்தி வருகிறோம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றோம். ஷீரடி சாய்பாபா அருளால், கன்றுக்குட்டிகள் நலமுடன் உள்ளன, என்றார்.