சிதம்பரத்திற்கு 21ம் தேதி விவேகானந்தர் ரதம் வருகை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2013 11:10
சிதம்பரம்: சென்னை ராமகிருஷ்ண மடம் சார்பில் சுவாமி விவேகானந்தர் ரத ஊர்வலம் வரும் 21ம் தேதி சிதம்பரம் வருகிறது. சுவாமி விவேகானந்தர் 150 வது பிறந்த ஆண்டு விழாவையொட்டி சென்னை ராமகிருஷ்ண மடம் சார்பில் சுவாமி விவேகானந்தர் ரத ஊர்வலம் வரும் 21 மற்றும் 22ம் தேதி சிதம்பரத்திற்கு வருகிறது. 21ம் தேதி சிதம்பரத்தில் புறப்பட்டு அண்ணாமலை நகர் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ரதம் உலா வர உள்ளது. 22ம் தேதி மாலை 4 மணியளவில் சிதம்பரம் கீழரத வீதியில் ரதம் புறப்பாடு செய்து நான்கு வீதிகள் வலம் வந்து கிழக்கு சன்னதியில் பொதுமக்கள் பார்வைக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆன்மிகவாதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்கின்றனர். இதனை யொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே விவேகானந்தர் சிந்தனைகள் குறித்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில பாடல் ஒப்புவித்தல் போட்டி. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் மற்றம் ஆங்கிலத்தில் பேச்சு மற்றும் போட்டி சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்யாசாலா மேல்நிலைப் பள்ளியில் 14ம் தேதி நடந்தது. இதில் ஒவ்வொரு வகுப்பிலும் இருவர் வீதம் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு 22ம் தேதி பரிசளிப்பு விழா கீழ வீதி கோதண்டராமர் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில் ராமகிருஷ்ணா மடம் நிர்வாகிகள், நகர முக் கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.