பதிவு செய்த நாள்
16
அக்
2013
11:10
கோவை: பக்ரீத் பண்டிகையை ஒட்டி, கோவையிலுள்ள பள்ளிவாசல், மசூதி, ஜமாத்களில், சிறப்புத்தொழுகை இன்று (அக்., 16) நடக்கிறது. கோவை மாவட்ட அனைத்து ஜமாத் பொதுச்செயலாளர் முகமது அலி கூறியதாவது:கோவை திருப்பூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள், மசூதிகள், ஜமாத்கள் உள்ளன. இது தவிர சிறப்பு தொழுகை ஈத்கா மைதானங்களி லும் தொழுகை நடக்கிறது. பக்ரீத் பண்டிகையை ஒட்டி கோவை மாவட்ட அனைத்து ஜமாத் சார்பில், வடகோவை அஷலே சுன்னத்ஜமாத்தில் அக்,16 ம் தேதி, காலை 8.15 க்கு சிறப்பு தொழுகை நடக்கிறது. * ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் பக்ரீத் பெருநாள் சிறப்புத்தொழுகை இன்று (அக்,16) காலை 8.00 மணிக்கு, கரும்புக்கடையிலுள்ள இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி திடலில் நடக்கிறது. தொழுகையின் நிறைவில் சிறப்பு சொற்பொழிவும், உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனையும் நடக்கிறது.* கோவை ஒப்பணக்காரவீதியிலுள்ள அத்தர்ஜமாத், கோட்டைமேட்டிலுள்ள பெரியபள்ளிவாசல், கவுண்டம்பாளையத்திலுள்ள நூர்மஸ்ஜித், ரத்தினபுரியிலுள்ள தாருல்குர்ரான் ஜமாத், சுந்தராபுரத்திலுள்ள ஜீனுல்இஸ்லாம் ஜமாத், கரும்புக்கடையிலுள்ள பவுசுல்இஸ்லாம் ஜமாத் உள்ளிட்ட ஏராளமான ஜமாத்களிலும், பள்ளிவாசல்களிலும் சிறப்புத்தொழுகை நடக்கிறது.