பதிவு செய்த நாள்
16
அக்
2013
11:10
நாகர்கோவில்: முஸ்லிம் மக்களின் ஹஜ் பெருநாளான, பக்ரீத் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன், ஒரு நாள் முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்தில், நேற்று கொண்டாடப்பட்டது. அரசு அறிவிப்புப்படி இந்தியா மற்றும் பல நாடுகளில், இன்றுதான் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால், சவுதி அரேபியா உட்பட, சில நாடுகளில், நேற்று பக்ரீத் கொண்டாடப்பட்டதை தொடர்ந்து, குமரி மாவட்டத்தில், ஒரு பிரிவு முஸ்லிம் மக்கள், நேற்று பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர். நேற்று காலையில், மாவட்டத்தின் சில பள்ளி வாசல்களில், பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில், ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.