சிவகங்கை: கொல்லங்குடி வெட்டுடையார் காளிகோயிலில், அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. நவராத்திரியை முன்னிட்டு தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளினார். பத்தாம் நாள் நிகழ்ச்சியன்று, இரவு 7 மணிக்கு மகிஷாசுரசம்ஹாரம் நடந்தது. அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்தார். நிர்வாக அலுவலர் இளையராஜா ஏற்பாட்டை செய்தார். சிறப்பு பூஜைகளை சிவாச்சாரியார்கள் சந்திரன், நேரு, சுகுமாறன் செய்திருந்தனர். புஷ்பராஜ் அம்பு எய்தார்.ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.