பேரூர்: ஈஷாயோக மையத்தில், விஜயதசமி திருவிழா நடந்தது. விஜயதசமியன்று, குழந்தைகளுக்கு முதல் கல்வியை அறிமுகப்படுத்தும் சடங்கான "வித்யாரம்பம் நிகழ்ச்சி துவங்கியது. இதில், 200க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, பாரம்பரிய முறைப்படி தேவியின் அருளுடன் கல்வி துவக்கி வைக்கப்பட்டது. பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான குழந்தைகள் பெற்றோர்களுடன் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின், ஈஷா மையத்திலுள்ள சூரியகுண்டம் முன்பாக, "இந்துஸ்தானி இசை நிகழ்ச்சி நடந்தது. இதேபோல, பேரூர் தமிழ்கல்லூரியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி, பேரூர் இயையபட்டம் மருதாசல அடிகள் தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், பேரூர் சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமான குழந்தைகள் பெற்றோர்களுடன் பங்கேற்றனர்.