புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டை கிருஷ்ணா நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை செல்வகணபதி கோயிலில் நவராத்திரி உற்சவம் நடைபெற்றது. இங்குள்ள கணபதி மேற்கு திசை அமர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 நாள்களாக நாள்தோறும் இங்குள்ளஅம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. நவராத்திரி கடைசிநாளன்று அம்மனுக்கு துர்கை அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. மாணவ, மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்கள், எழுதுப் பொருள்கள் வழங்கப்பட்டன.