கிருஹஸ்தனுக்கு மூலம் கிருஹணியே. சுகத்திற்கு ஸாதனமும் பார்வையே. தர்மத்திற்கு காரணம் தர்மபத்தினியே. சந்ததிக்கு காரணம் சதியே - சிவபுராணம். அடக்கம், உண்மை, தயை இவை மூன்றும் பெண்களைப் பாதுகாக்கும் தேவதைகள். உத்தம மனைவியைப் பெற ஒரே வழி உத்தமக் கணவனாக இருத்தலே. நூறு பேர் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஒரு இல்லத்தை அமைக்க அதை இல்லமாக்க ஒரு பெண் தான் வேண்டும்.