திருப்பூர்: திருப்பதியில் ஸ்ரீவாரி உண்டியல் எண்ணும் பணிக்கு, பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருமலை திருப்பதியில் ஸ்ரீவெங்கடேச பெருமாளுக்கு பக்தர்கள் செலுத்தும் காணிக்கை தினமும் எண்ணப்படுகிறது. இப்பணியில் திருப்பூர் மாவட்ட பக்தர்களும் பங்கேற்கும் வகையில், ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் அனுப்பப்படுகின்றனர். மூன்று அல்லது நான்கு நாட்கள் தொடர்ந்து தங்கி சேவை செய்ய வேண்டும். சேவகர்கள் வசதிக்கு ஏற்ற நாட்களை தேர்வு செய்து கொள்ளலாம்; ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். உண்டியல் எண்ண செல்லும் சேவகர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும், ஸ்ரீவாரி டிரஸ்ட் செய்து வருகிறது. பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், திருப்பூர் தாராபுரம் ரோட்டிலுள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இரண்டு கலர் போட்டோ, ரேஷன் கார்டு நகல், அடையாள அட்டை நகல் அளித்து பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.