உண்மையான குடும்பப்பெண் ஒரே சமயத்தில் அடிமையாகவும், எஜமானியாகவும் இருப்பாள். உயிரைக் காக்கும், உயிரினைச் சேர்த்திடும், உயிரினுக்குயிராய் இன்பமாகிவிடும் உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா குணமுள்ள பெண் ஒருவன் கருத்தில் ஒளி வீசுகிறாள், அறிவுடைய பெண் ஒருவனின் கவனத்தைக் கவர்கிறாள், அழகான பெண் ஒருவனின் கலையுணர்வை மயக்குகிறாள். ஆனால் பரிவும், பாசமும் உள்ள பெண்ணோ அவனையே தனக்காக்கிக் கொள்கிறாள். வாழ்வின் இன்பத்திற்கு அழகைவிட அன்பே முக்கியம். தன் கணவனே தெய்வமெனக் கொண்டு அவனது பணிவிடைகளில் குறையேதும் இல்லாமல் செய்து வரும் பெண்மணிக்குத் தெய்வமும் ஏவல் செய்யும்.