ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலம் மீட்பு அறநிலையத்துறை நடவடிக்கை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2013 11:10
இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின்கீழ் வேளிமலை அருகே உள்ள தாதங்கோடு சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 9 சென்ட் புஞ்சை நிலம் கல்குளத்தில் உள்ளது. இந்த நிலம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகர் உத்தரவின் பெயரில் இந்த நிலம் மீட்கப்பட்டு திருக்கோவில் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட இந்த இடம் திருக்கோவிலுக்கு சொந்தமானது என்பதற்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. நிலத்தை சுற்றி முள் வேலி அமைக்கப்பட்டது. இந்த இடத்தில் மதிப்பு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.