பதிவு செய்த நாள்
28
அக்
2013
01:10
சொற்களில் பல ரகங்கள் இருக்கின்றன. சில சொற்களைக் கேட்டால் மனதில் உற்சாகம் எழும். சிலவற்றைக் கேட்டால் கோபம் வரும். ஒருவனது குறையை சுட்டிக்காட்டும், கீழான சொற்கள் மனிதசக்தியை வற்றச் செய்து விடுபவை. மனிதன் நல்லதை மட்டுமே பேச வேண்டும் என்பதற்காகவே, போற்றி மந்திரம் சொல்லும் வழிபாட்டுமுறையை பெரியவர்கள் ஏற்படுத்தினர். விநாயகர், முருகன், சிவன், விஷ்ணு, அம்பிகை என்று எல்லா தெய்வத்திற்கும் 108, 1008 போற்றி மந்திரங்கள் உள்ளன. இதில் எல்லாம் வல்ல சிவனே போற்றி! எனக்குத் துணையிருப்பவனே போற்றி என்பது போன்ற சொற்கள் இடம்பெற்றிருக்கும். எல்லாம் வல்ல சிவனே என்று உச்சரிக்கும்போது, ஆற்றல் உணர்வு நமக்குள் நுழைகிறது. மனதையும், உடலையும் வலிமை பெறச் செய்கிறது. துணையிருப்பவனே என்னும்போது, நமக்கும் மேலாக இருக்கும் ஒருவன் நம்முடன் துணையிருக்கும் போது, எதற்கும் பயமோ, கவலையோ கொள்ளமாட்டேன் என்ற எண்ணம் வருகிறது. அதனால், தினமும் போற்றி சொன்னால் வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.