பதிவு செய்த நாள்
29
அக்
2013
10:10
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, அரிய வகை, பழந்தின்னி வவ்வால்கள் நலன் கருதி, கிராம மக்கள், 30 ஆண்டுகளாக,பட்டாசு வெடிக்காமல, தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, ஊனத்தூர் கிராமத்தில்,சுப்ரமணியர், மணியம்மன் கோவில்கள் உள்ளன.கோவில் அருகில் உள்ள, மரக் கிளைகளில், அரிய வகையை சேர்ந்த, 20,000 துக்கும் மேற்பட்ட, பழந்தின்னி வவ்வால்கள் வசித்து வருகின்றன. காலை முதல், மதியம் வரை,சுப்ரமணியர் கோவிலில் உள்ள மருத மரத்திலும்,மாலையில், மணியம்மன் கோவில் ஆலமரம் மற்றும் மூங்கில் தோப்புகளில், 30 ஆண்டுகளாக, வசித்து வருகின்றன.இரவில், சின்னக்கல்வராயன் மலைப்பகுதிக்கு, இரை தேட சென்றுவிட்டு, அதிகாலை,வசிப்பிடத்துக்கு, வந்து விடுகின்றன. தீபாவளி போன்ற நாட்களில் பட்டாசு வெடி சத்தம் கேட்டால், வவ்வால்கள் சென்றுவிடும் என்பதால், 30 ஆண்டுகளாக, இக்கிராமமக்கள் பட்டாசு வெடிப்பதில்லை. புத்தாடை அணிந்து, சத்தம் இல்லாமல், தீபாவளியை கொண்டாடுகின்றனர். அதன்படி,வரும் தீபாவளி அன்று, பட்டாசு வெடிப்பதில்லை என, முடிவு செய்துள்ளனர்.