சிதம்பரம் சிவகாம சுந்தரி அம்மன் பூரம் உற்சவ தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2013 11:10
சிதம்பரம்: சிதம்பரத்தில் சிவகாம சுந்தரி அம்மன் பூரம் உற்சவத்தையொட்டி நடந்த திருத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். சிதம்பரம் நடராஜர் சுவாமி கோவிலில் உள்ள சிவகாமசுந்தரி அம்மனுக்கு ஐப்பசி பூரம் உற்சவம் கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி அம்மனுக்கு தினமும், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. 9ம் நாள் உற்சவமான திருத்தேரோட்டம் நேற்று நடந்தது.அதனையொட்டி சிவகாமசுந்தரி அம்மனுக்கு சிறப்பு பூஜை, வழிபாடு செய்து தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பக்தர்கள், அரோகரா, தில்லை அம்பலத்தானே. சிவகாமியம்மனே என பலத்த கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தொடர்ந்து, இன்று அம்மன் பட்டு வாங்கும் மற்றும் பூரச்சலங்கை விழா நடக்கிறது. நாளை (31ம் தேதி) காலை தபசு உற்சவம், இரவு சிவானந்தநாயகி சமேத சோமாஸ்கந்தர் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.