மானாம்பதி: அகரம் விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி துவங்கியது. திருப்போரூர் அடுத்த அகரம் கிராமத்தில், பழமையான விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் பராமரிப்பின்றி இருந்ததால், அகரம் கிராமத்தினர் திருப்பணி செய்ய முடிவு செய்தனர். நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, திருப்பணிக்கான சிறப்பு பூஜை நடந்தது. இதில், சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.