Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் சிவராத்திரி வழிபாடு; ... கடலுார் சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்; பக்தரகள் தரிசனம் கடலுார் சிவகாமி அம்மனுக்கு சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
சென்னை தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

07 பிப்
2026
04:02

சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 


இதை முன்னிட்டு, நேற்று காலை குங்கும அர்ச்சனையும், மாலை முளைப்பாரி எடுத்தலும் நடந்தது. பிரம்மோத்சவ துவக்க நாளான இன்று காலை துவஜாரோஹணம் எனும் கொடியேற்ற வைபவம் நடந்தது.  மதியம் ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. மாலை உஞ்சல் சேவை நடந்தது. இரவு சின்ன சேஷ வாகனத்தில், தாயார் பிரஹாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில், ஏராளமானோர் பங்கேற்றனர். வரும், 16ம் தேதி வரை நடக்கும் இந்த உத்சவத்தில், நாளை பெரிய சேஷ வாகனம், ஹம்ச வாகன புறப்பாடு நடக்கிறது. நாளை மறுநாள் முத்துப்பந்தலும், இரவு சிம்ம வாகன புறப்பாடும் நடக்கிறது. கல்ப விருக்‌ஷ, ஹனுமந்த வாகன புறப்பாடு வரும், 10ம் தேதி நடக்கிறது. 11ம் தேதி பல்லக்கு உற்சவமும், கஜ வாகன புறப்பாடும் நடக்கிறது. 12ம் தேதி சர்வபூபால வாகன புறப்பாடும், அன்று இரவு 7:00 மணிக்கு கருட வாகன புறப்பாடு நடக்கிறது.  சூரிய, சந்திர பிரபை வாகன புறப்பாடு, பிப்., 13ம் தேதி நடக்கிறது. அடுத்த நாள் காலை ரத உற்சவமும், அன்று இரவு அஸ்வ வாகன புறப்பாடும் நடக்கிறது. வரும், 15ம் தேதி சக்ர ஸ்நானம் காலை நடக்கிறது. இரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோத்சவம் பூர்த்தியடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar