பதிவு செய்த நாள்
09
நவ
2013
11:11
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், உண்டியல் காணிக்கையாக,33 லட்சத்து 65 ஆயிரத்து 733 ரூபாய்பக்தர்கள் செலுத்தினர். ஆனைமலை மாசாணியம்மன் கோவில், பொள்ளாச்சி பகுதியில் பிரசித்தி பெற்றது.வெளி மாவட்டங்களிலிருந்தும் மற்றும்சுற்று வட்டார பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில்,16 நிரந்தர உண்டியல்களும்; இதுதவிர,6 தட்டு காணிக்கை உண்டியலும்வைக்கப்பட்டுள்ளன. மாதத்திற்கு ஒரு முறை உண்டியல்கள் திறக்கப்படுவது வழக்கம்.இந்த மாதத்திற்கான உண்டியல் திறப்புநிகழ்ச்சி, நேற்றுமுன்தினம் நடந்தது. மொத்தம் 16 நிரந்தர உண்டியல்களில்,பத்தும்; ஆறு தட்டு காணிக்கை உண்டியல்களும் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டன.நிரந்தர உண்டியலில், 23 லட்சத்து 95 ஆயிரத்து 615 ரூபாயும்; தட்டு காணிக்கை உண்டியலில், 9 லட்சத்து 70 ஆயிரத்து 118 ரூபாயும் இருந்தது. தங்கம் 155 கிராமும், வெள்ளி 359 கிராமும் இருந்தது. உண்டியல் திறப்பு நிகழ்ச்சி, கோவில் இணை ஆணையர் அனிதா முன்னிலையில் நடந்தது. காணிக்கை எண்ணும் பணியில்,60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.