Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சாயி ஸத் சரித்திர பாராயணம்! சாயி ஸத் சரித்திர பாராயணம்! சீரடி சாயிபாபா ஆரத்தி பாடல்கள் பகுதி - 1 சீரடி சாயிபாபா ஆரத்தி பாடல்கள் ...
முதல் பக்கம் » சீரடி சாயி பாபா வழிபாடு
சீரடி சாயி பாபா பூஜை மந்திரங்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 நவ
2013
16:41

சாயி நாத பூஜை

சாயி நாதரின் பூஜையை ஆரம்பிப்பதற்கு முன் அவரவர்களின் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு ஆரம்பிக்கலாம்.

ஆசமனம் :  (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி, மூன்று முறை உட்கொள்ளவும்.)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அநந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்க வந்தனம் (பெண்களுக்கு கிடையாது)

கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு வலது கை விரல்களால் அந்தந்த அங்கங்களை தொட வேண்டும்.

ஓம் கேசவாய நம: - கட்டை விரலால் வலது கன்னம்
ஓம் நாராயணாய நம: - கட்டை விரலால் இடது கன்னம்
ஓம் மாதவாய நம: - மோதிர விரலால் வலது கண்
ஓம் கோவிந்தாய நம: - மோதிர விரலால் இடது கண்
ஓம் விஷ்ணவே நம: - ஆள்காட்டி விரலால் வலது மூக்கு
ஓம் மதுஸுதனாய நம: - ஆள்காட்டி விரலால் இடது மூக்கு
ஓம் த்ரிவிக்ரமாய நம: - சுண்டு விரலால் வலது காது
ஓம் வாமனாய நம: - சுண்டு விரலால் இடது காது
ஓம் ஸ்ரீதராய நம: - நடுவிரலால் வலது தோள்
ஓம் ஹ்ருஷீகேசா ய நம: நடுவிரலால் இடது தோள்
ஓம் பத்மநாபாய நம: - நான்கு விரல்களால் நாபி (தொப்புள்) யைத் தொடவும்
ஓம் தமோதராய நம: ஐந்து விரல்களையும் சேர்த்து, தலையைத் தொடவும்.

கணபதி தியானம்

வலது கையில் அக்ஷதை எடுத்துக் கொண்டு இரு கைகளாலும் தலையில் 5 முறை குட்டிக் கொண்டே கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி கணபதியின் பாதங்களில் சமர்ப்பிக்கவும்.

சு க்லாம்பரதரம் விஷ்ணும் ச சிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபசா ந்தயே

குரு தியானம்

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச் வர:
குருஸ்ஸாக்ஷõத் பரப் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:
நாராயண ஸமாராம்பம் வியாஸ ச ங்கர மத்யமாம்
அஸ்மதாசர்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

பிராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. வலது மூக்கை வலது கைக் கட்டை விரலாலும், இடது மூக்கைச் சுண்டுவிரல், மோதிர விரல்களாலும் பிடித்துக் கொண்டே கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)

ஓம் பூ:, ஓம் புவ:, ஓகு:ம ஸுவ:, ஓம் மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோதேவஸ்ய தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ தயாத் ஓமாபோ ஜ்யோதீரணு:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ்ஸுவரோம் ஓம் (வலது காதைத் தொடவும்)

ஸங்கல்பம்

வலது கையை (அக்ஷதையுடன்) இடது கைமேல் வைத்து இரண்டு கைகளையும் வலது தொடை மேல் வைத்தவாறு கீழ்வரும் மந்திரத்தைச் சொல்லவும்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா, ஸ்ரீபரமேச் வர ப்ரீத்யர்த்தம், சு பே, சோ பனே முஹுர்த்தே, ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ச் வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்ச திதமே, கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரதகண்டே, மேரோ, தக்ஷிணே பார்ச வே, ச காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவஹாரிகே, ப்ரபவாதீனாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே, ......... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்). ........... அயனே (அயனத்தின் பெயர்), ........ ருதௌ (ருதுவின் பெயர்), .......... மாஸே (மாதத்தின் பெயர்), ..... ப÷க்ஷ (வளர்/தேய்பிறை), .......... சு பதிதௌ, .......... வாஸர யுக்தாயாம் (கிழமையின் பெயர்), ......... நக்ஷத்ர யுக்தாயாம் (நட்சத்திரத்தின் பெயர்), சு பயோக சு பகரண, ஏவங்குண விசே ஷண விசிஷ்டாயாம், அஸ்யாம் சு பதிதௌ, அஸ்மாகம் ஸஹ குடும்பானாம் ÷க்ஷமஸ்த்தைர்ய, தைர்ய, வீர்ய, விஜய ஆயுராரோக்ய ஐச் வர்யாணாம் அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த மங்களாவாப்த்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம் தர்மார்த்த காமமோக்ஷ சதுர்வித ஃபல புருஷார்த்த ஸித்யர்த்தம், லோகஸம்ரக்ஷணார்த்தம் ஸ்ரீ சாயி நாத தேவதாமுத்திச் ய, ஸ்ரீ சாயி நாத தேவதா ப்ரீத்யர்த்தம் யதா ச க்தி, த்யானாவாஹநாதி ÷ஷாடசோ பசார பூஜாம்ச கரிஷ்யே.

(அக்ஷதையை வடக்குப்புறம் கீழே போட்டு கை அலம்பவும்)

விக்னேஸ்வர பூஜை

வக்ரதுண்ட மஹாகாய சூர்ய கோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமே தேவ சர்வ கார்யேசு சர்வதா

கண்டா பூஜை: (பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீய சக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்).

ஆகமார்த்தம் து தேவானாம் கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாராவம் க்ரோம்யாதௌ தேவதாஹ்வான லாஞ்ச்சனம்

கலச பூஜை: பஞ்சபாத்திரத்திற்கு (தீர்த்த பாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.

அஸ்மின் கலசே திவ்ய பரிமள கந்தாம் ஸமர்ப்பயாமி

கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும்.

கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் ஸமர்ப்பயாமி

பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்த பாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளசி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.

ஓம் கங்காயை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் ஸிந்துவே நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் சர்வதீர்த்ததேவதாப்யோ நம:

பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லவும்.

கலச ச் லோகம்

கலச ஸ்ய முகே விஷ்ணு: கண்டே ருத்ர: ஸமாச் ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:

குöக்ஷள து ஸாகரா: ஸர்வே ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ(அ)த யஜுர்வேத: ஸாமவேதோ(அ)ப்யதர்வண:

அங்கைக் ச ஸஹிதா: ஸர்வே கலசா ம்பு ஸமாச் ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம் ஸர்வ துரிதக்ஷயகாரகா:

கங்கை ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி ஜலே(அ)ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ (3 முறை)

என்று ஜபித்து, கலசத் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவியங்களையும், சுவாமியையும் பிரோக்ஷித்து, தன்னையும் பிரோக்ஷித்துக் கொள்ளவும்.

ஆவாஹனம்

ப்ரஹ்மானந்தம் பரம ஸுகதம்
கேவலம் ஞானமூர்த்திம்
த்வந்த்வாதீதம் ககன ஸத்ருஷம்
தத்வ மஸ்யாதிலக்ஷ்யம்

ஏகம் நித்யம் விமலம் அசலம்
ஸர்வதீஸாக்ஷிபூதம்
சாயீநாதம் த்ரிகுணர ஹிதம்
ஸத்குரும் தம்நமாமி

நமஸ்தே சாயிநாதாய
மோக தந்த்ர விநாசினே
குரவே புத்திபோதாய
போத மாத்ரஸ்வரூபிணே.

அஸ்மின் சித்ரபடே ஸாயிநாதம் த்யாயாமி/ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை சமர்ப்பிக்கவும்)

ஸமஸ்த உபசார பூஜைகள்

ஸ்ரீ ஸாயிநாதாய நம: நவரத்ன கஜித ஸிம்ஹாஸநார்த்தே
அக்ஷதான் ஸமர்ப்பயாமி (புஷ்பம் அக்ஷதைகளை சமர்ப்பிக்கவும்)

ஸ்ரீ ஸாயிநாதாய நம: பாதயோ: பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

ஸ்ரீ ஸாயி நாதாய நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

ஸ்ரீ ஸாயிநாதாய நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தொட்டு தெளிக்கவும்)

ஸ்ரீ ஸாயிநாதாய நம: சு த்தோதக ஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தொட்டு தெளிக்கவும்)

ஸ்ரீ ஸாயிநாதாய நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

ஸ்ரீ ஸாயிநாதாய நம: வஸ்த்ரம்/வஸ்த்ரார்த்தே அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(ஆபரணம்/ அக்ஷதை சமர்ப்பிக்கவும்)

ஸ்ரீ ஸாயிநாதாய நம: அலங்காரணார்தே அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

ஸ்ரீ ஸாயிநாதாய நம: கந்தம் ஸமர்ப்பயாமி
(வலது கை மோதிர விரலால் சந்தனமிடவும்)

ஸ்ரீ ஸாயிநாதாய நம: ஹரித்ராசூ ர்ணம் ஸமர்ப்பயாமி
(குங்குமம் சமர்ப்பிக்கவும்)

ஸ்ரீ ஸாயிநாதாய நம: புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம்/மாலை போடவும்)

உத்தராங்க பூஜை

ஸ்ரீ ஸாயிநாதாய நம: தூபமாக்ராபயாமி
(சாம்பிராணி, ஊதுபத்தி காட்டவும்)

ஸ்ரீ ஸாயிநாதாய நம: தீபம் தர்ச யாமி
(நெய் தீபம் காட்டவும்)

ஸ்ரீ ஸாயிநாதாய நம: தூப தீபானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

நைவேத்திய மந்திரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பூலத்தில் வைத்து கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)

ஓம் பூர்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மேற்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்திய தாம்பூலத்தின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்
(தீர்த்தத்தை நைவேத்தியங்களின் மேல் தெளிக்கவும்)

தேவஸவித ப்ரஸுவ ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(தீர்த்தத்தை நைவேத்திய தாம்பூலத்தின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

அம்ருதமஸ்து, அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்)

(கீழ்கண்ட ஒவ்வொரு மந்திரத்திலும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு, சுவாமியின் பக்கம் கைகளால் காண்பித்து நைவேத்தியம் செய்யவும்).

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபாயநாய ஸ்வாஹா, ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா, ஓம் ஸமாநாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா, ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய

ஸ்ரீ ஸாயிநாதாய நம: நாளீகேர கண்ட த்வயம், கதலீஃபலம் ஸஹிதம் மஹா நைவேத்யம் நிவேதயாமி (நைவேத்தியம் செய்யவும்)

மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

நைவேத்யாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் 3 முறை உத்தரணியால் தீர்த்தம் விடவும்)

சுத்தமான தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, பழம் எடுத்து வைத்து கீழ்வரும் மந்திரத்தைச் சொல்லவும்.

பூகீஃபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ருதிக்ருஹ்யதாம்
ஸ்ரீ ஸாயிநாதாய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலத்தின் மேல் தீர்த்தம் விட்டு, நைவேத்தியம் செய்யவும்.)

தீபாராதனை

ஸ்ரீ ஸாயிநாதாய நம: கற்பூர நீராஜனம் ஸந்தர்ச யாமி
(கற்பூர ஆரத்தி காட்டவும்)

ஸ்ரீ ஸாயிநாதாய நம: நீராஜநானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்) தீபாராதனைக்குப் பிறகு ஆரத்தி பாடலை பாடவும்.

ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தை சுவாமியிடம் சமர்ப்பிக்கவும்)

மந்த்ரபுஷ்பம்

ஓம் யஜ்ஞேன யஜ்ஞமயஜந்த தேவாஸ்தாநி
தர்மாணி ப்ரதமாந்யாஸந்
தே ஹ நாகம் மஹிமாந: ஸசந்தே
யத்ர பூர்வே ஸாத்யா: ஸந்தி தேவா:

ஓம் யோ(அ) பாம் புஷ்பம் வேத
புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி
சந்த்ரமா வா அபாம் புஷ்பம்
புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான்பவதி
ய ஏவம் வேத
யோ(அ) பாமாயதனம் வேத
ஆயதனவான் பவதி

ஓம் ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே
நமோ வயம் வைச் ரவணாய குர்மஹே
ஸ மே காமான் காம காமாய மஹ்யம்
காமேச் வரோ வைச் ர வணோ ததாது
குபேராய வைச் ரவணாய
மஹாராஜாய நம:

ஓம் ஸ்வஸ்தி ஸாம்ராஜ்யம் பௌஜ்யம் ஸ்வாராஜ்யம்
வைராஜ்யம் பாரமேஷ்ட்யம் ராஜ்யம்
மஹாராஜ்யமாதிபத்யம் மயம் ஸமந்தபர்யா
ஈஸ்யாத் ஸார்வபௌம:
ஸார்வயுஷாந் த தாபரார்தாத்
ப்ருதிவ்யை ஸமுத்ரபர்யந்தாய ஏகராளிதீ
ததப்பேஷ ச் லோக(அ) பிகீதோ மருத:
பர்வேஷ்ட்ரோ மருத்தஸ்யாவஸந் க்ருஹே
ஆவிக்ஷிதஸ்ய காமப்ரேர்விச்வே தேவாஹ: ஸபாஸத இதி
ஓம் ஸ்ரீ நாராயண வாசுதேவ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயி நாத் மஹாராஜ்கீ ஜய்.

ஸ்ரீ ஸாயிநாதாய நம: மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி
(புஷ்பங்களை சமர்ப்பிக்கவும்)

ஸ்ரீ ஸாயிநாதாய நம: ச்சத்ர - சாமராதி ஸமஸ்த்த
ராஜோபசாரார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை சமர்ப்பிக்கவும்)

ப்ரார்த்தனை, ப்ரதக்ஷிணம், நமஸ்காரம்
(கையில் புஷ்பம் அக்ஷதைகளை எடுத்துக்கொண்டு கீழ்வரும் ஸ்லோகத்தைச் சொல்லியபடி 3 முறை ப்ரதக்ஷிணம் செய்யவும்)

யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச
தானி தானி விநச் யந்தி ப்ரதக்ஷிண பதே பதே
பாபோஹம் பாபகர்மாஹம் பாபாத்மா பாப ஸம்பவஹ:
த்ராஹிமாம் க்ருபயா தேவ சரணாகத வத்ஸலா
அன்யதா சரணம் நாஸ்தி த்மேவ சரணம் மம
தஸ்மாத் காருண்ய பாவேன ரக்ஷ ரக்ஷ ஸ்ரீ ஸாயீச் வரா
ஆத்ம ப்ரதக்ஷிண நமஸ்காரன் ஸமர்ப்பயாமி
(ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவும்)
ஓம் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸமர்த்த ஸத்குரு ஸாயிநாத் மஹராஜ்கீ ஜய்

விபூதி தாரணம்

சாயி நாதரை மனதில் தியானித்துக் கொண்டு இந்த ஸ்லோகத்தை மூன்று முலை சொல்ல வேண்டும்.

ஸ்ரீகரம் நித்யம் சுபகரம், திவ்யம் பரமம், பவித்ரம்
மஹா பாபஹரம் ஸ்ரீ ஸாபி பாபா விபூதிம் தாரயாம்யஹம்
பரமம், பவித்ரம் பாபா விபூதிம் பரமம் விசித்ரம் லீலா
விபூதிம் பரமார்த்த இஷ்டார்த்த மோக்ஷ பிரதாந்தம்
பாபா விபூதிம் இதமாஸ்ரையாமி

இந்த ஸப்த ஸப்தாஹா விரதத்தை மேற்கொள்ளும் 49 நாட்களும் காலையில் பூஜை முடித்தவுடன் எப்போது முடிகிறதோ அப்போது சாயி சத் சரித்திரம் படிக்கவும். தினமும் பாராயணம் முடிந்த பிறகு உங்களால் இயன்ற அளவு காணிக்கையை பாபாவின் பாதங்களில் சமர்ப்பிக்கவும். பாராயணம் முடிந்த நாளன்று, சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து காணிக்கைகளையும் திரட்டி, அருகிலுள்ள சாயி பாபாவின் கோயில் உண்டியலில் செலுத்தவும்.

மங்கள ஆரத்தி

ஸ்வாமி ஸாயிநாதா ஷீர்டி ÷க்ஷத்ர வாஸாயா
நமகா பீஷ்ட ப்ரதாய மஹீத மங்களம் - ஸ்வாமி
லோக நாதாய பக்த லோக சம்ரக்ஷகாய
நாகலோக ஸ்த்துத்தாய நவ்ய மங்களம் - ஸ்வாமி
பக்த விருந்த வந்திதாய ப்ரஹ்ம ஸ்வரூபாய
முக்தி மார்க்க போதகாய பூஜ்ய மங்களம் - ஸ்வாமி
சத்ய தத்வபோதகாய சாது வேஷயதே
நித்ய மங்கள தாயகாய நித்ய மங்களம் - ஸ்வாமி

ஆரத்தி (2) (மராத்தி)

ஆரத்தி ஸாயிபாபா ஸெளக்ய தாதாரா ஜீவாம்
சரண ரஜதளீம் நிஜ தாஸாம் விஸாவா பக்தாம் விஸாவா

ஜாரு நியாம் அநங்க ஸ்வரூபி ராஹே டங்க
முமுக்ஷு ஜனா தாவீ நின டோளா ஸ்ரீரங்கா  (ஆரத்தி)

ஜயாமநிம் ஜய் ஸாபாவ தயா தைஸா அனுபவ
தாவஸீ தயாகநா ஜஸீ து ஜீ ஹீமாவ   (ஆரத்தி)

துமசே நாம த்யாதா ஹரே ஸம சுருதி வ்யதா
அகதா தவ கரணீ மார்க தாவிஸீ அநாதா   (ஆரத்தி)

கலியுகீ அவதார ஸுகுண ப்ரம்ம ஸாசார
அவதீர்ண ஜாலாஸே ஸ்வாமீ தத்தா திகம்பர  (ஆரத்தி)

ஆட்டா திவஸா குருவாரீம் பக்தகரீதிவாரீ
ப்ரபுபத பஹாவயா பவ பய நிவாரீ   (ஆரத்தி)

மாஜா நிஜ த்ரவ்ய டேவா தவ சரண ரஜஸேவா
மாகணே ஹேச்சி ஆதா தும்ஹா தேவாதி தேவா  (ஆரத்தி)

இச்சித தின சாதக நிர்மள தோய நிஜ ஸுக
பாஜாவே மாதவா யா ஸாம் பாள ஆபூலீ பாக  (ஆரத்தி)

ஆரத்தி (3)

ஜயதேவ ஜயதேவ ஸாயீ மஹாராஜ ஸ்ரீ ஸாயீ மஹாராஜ
ஓவாளீதோம் பாவோம் ஆரத்தீ யோகீராஜ  (ஜயதேவ)

அகடித கடநா கடலீ பக்த ஜனாம் லாட்டீ
ஸாயீ ரூபாநேம் ஆலே ஜகதீம் ஜகஜேட்டீ

அகாத ஹீகுரு லீலா ந களே கோணாலா
மங்கல மகந்த - மஹிமா ஸகலாம் தாவியலா  (ஜயதேவ)

பஸலாம் பாங்குநி பாரிக சிம்த்யாம்சா ஜோலா
ஆத்மபலாசா தேவ்ஹாம் நவ ப்ரத்யய ஆலா
தேலாம் வாசுநி ஸஹஜீ பணாத்யா பேடவில்யா
அநந்த அஸல்ய லீலா ஜகதாஸா திசல்யா (ஜயதேவ)

அசோத கீதீஹி மோட்டயா பாபாம்த்யா ராசீ
நாம ஸ்மரணேம் அவத்யா ஜாதீ விலயாஸீ
க்ருபா ப்ரஸாதே லாபே ஸகவஹி ஸம்ருத்தீ
குசல கராயா யேதி த்யா ருத்தீ ஸித்தீ (ஜயதேவ)

ஷீரடி வாஸீ ஸ்வாமீ ஸ்ரீ ஸத்குரு நாதா
துமச்யா சரணீம் ஆதாம் டேவியலா மாதா
உமிலிந்த மாதவ காதோ குண கௌரவ பாவே
துரித ஹராவேம் தர்ச ந தேஊநீ சுப வ்ஹேம்  (ஜயதேவ)

ஸ்ரீ சாயி சாலீஸா

ஷீர்டி வாஸா ஸாயிப்பிரபோ நீயே ஜகத்தின் பாதுகாப்பாளர்
தத்த திகம்பர அவதாரம் உன்னில் சிருஷ்டி விவகாரம்
த்ரிமூர்த்திரூபா ஓ ஸாயி கருணையோடு காப்பாய் ஓ ஸாயி
தரிசனம் கொடுக்க வாருங்கள் முக்திக்கு மார்க்கள் காட்டுங்கள்  (ஷீர்டி)

கந்தலாடையே (கப்னி) பொன்னாடையாய் ஜோல்னா பையே தோளின் அணிகலனாய்
வேப்பமரத்தினடியில் தோன்றி பக்கிரி ரூபத்தில் வலம் வந்தாய்
கலியுகத்தில் நீ அவதரித்தாய் பொறுமை தியாகம் கற்றுக் கொடுத்தாய்
ஷீர்டி கிராமம் உன்வாசம் பக்தர்கள் மத்தியில் உன் ரூபம்
சாந்த் பட்டீல் ஆழ்ந்தார் கவலையிலே குதிரையை இருமாதம் காணவில்லையே
ஸாயி நீ அவனுக்கு இரங்கினாய் தொலைந்த குதிரையை மீட்டுத் தந்தாய்  (ஷீர்டி)

எண்ணைக்கு பதிலாய் நீரூற்றியுமே ஒளி கொடுத்தாய் நீ ஜோதிக்குமே
அதனைக் கண்டவர் மெய் மறந்தனரே கேட்டவர் வியப்பு மாளவில்லையே
தாத்யாவின் உயிர் ஊசலாடியதும் தந்தாயே நீ உன் ஆயுளையும்
தாய் பாய்ஜா செய்த சேவையினால் தாத்யா உயிரை காத்தாயே!  (ஷீர்டி)

பசு, பட்சிகளிடம் இரக்கம் கொண்டாய் அன்பாலேயே எமக்கு அரசனானாய்
எல்லோர்பாலும் உன் அருள் நோக்கு பக்தனுக்களித்தாய் அமுத வாக்கு
உன் வாயில் படியில் நின்றேனே உன்னையே என்றும் துதித்தேனே
அபயம் தந்து காப்பாற்று ஸாயி கருணை காட்டு ஷீர்டி ஸாயி  (ஷீர்டி)

உன்னுடைய அருளால் துவாரகாமாயி பாக்கியமடைந்ததே ஓ ஸாயி
உன் துனியின் ஜ்வாலை பட்டதுமே பாவம் போனது சட்டெனவே
பிரளய மழையை சொல்லால் தடுத்து பக்தர்களைக் காப்பாற்றினாய்
கோதுமையை அரைத்தாய் அரவையிலே அரவையில் காலராவும் அரைந்ததே (ஷீர்டி)

மூலே சாஸ்திரி என்ற அந்தண ஸ்வாமிக்கு உனது லீலைகளைக் காட்டினாயே
விஷப்பாம்பு ஷாமாவை தீண்டியுமே விஷமிறக்கி அருளினாய் ஜீவனுமே
பக்த பீமாஜிக்கு க்ஷயரோகம் பொறுமை இழந்தான் பீமாஜி
உதி வைத்தியம் செய்தாய் வியாதியை மாயம் செய்தாய்
காகாஜி கண்டார் உன் திவ்ய ரூபம் அவருக்கு அளித்தாய் நீ விட்டல் ரூபம்
தாமுவிற்கு அளித்தாய் சந்தானம் அவர் மனம் பெற்றதே சந்தோஷம் (ஷீர்டி)

கருணாமூர்த்தி கருணை காட்டு எங்கள் மீது இரக்கம் காட்டு
அனைத்தும் உனக்கே அர்ப்பணமே எங்கள் பக்தி பெருகட்டுமே
மேகாவும் உன்னை அறியாமலே முஸ்லீம் என பேதம் கொண்டானே
உன்னில் காட்டினாய் சிவனையுமே மேகாவும் அடைந்தான் பரமபதமே  (ஷீர்டி)

மருத்துவருக்கு அளித்தாய் ஸ்ரீ ராம ரூபம் பல்வந்தருக்கு அளித்தாய் ஸ்ரீ தத்த ரூபம்
நிமோன்கருக்கு அளித்தாய் மாருதி ரூபம் சிதம்பரத்திற்கு அளித்தாய் கணபதி ரூபம்
மார்த்தாண்டருக்கு அளித்தாய் கண்டோபா கணூக்கு சத்யதேவனாக
நரஸிம்ம ஸ்வாமியாய் ஜோசிக்கு தரிசனம் தந்தாய் ஸ்ரீ ஸாயி  (ஷீர்டி)

இரவும் பகலும் உன் தியானம் நித்யம் உன் லீலாபடனம்
பக்தியோடு செய் த்யானம் கிடைக்கும் முக்தி மார்க்கம்
உன் பதினொன்று வாக்குகள் பாபா அது எங்களுக்கு வேதங்கள்
சரணம் என்று வந்த பக்தர்களை கருணை காட்டி நீ காப்பாற்றினாய்  (ஷீர்டி)

எல்லாவற்றிலும் உன் ரூபம் உன் மகிமை அதிக சக்தி மயம்
ஓ ஸாயி நாங்கள் அஞ்ஞானிகள் தாருமய்யா எங்களுக்கு ஞானத்தையே
சிருஷ்டிக்கு நீயே மூலம் ஸாயி நாங்கள் உன் சேவகர்கள்
ஸாயி நாம் ஜெபித்துமே நித்யம் ஸாயியை பிரார்த்திப்போம்  (ஷீர்டி)

பக்தியை அறிந்து ஸாயியை மனதில் நினைத்துக் கொண்டு
மனதோடு ஸாயி த்யானம் அனுதினமும் செய்ய வேண்டும்
பாபா எரித்த உதி நிவாரணம் தரும் அனைத்து வியாதி
சமாதியிலிருந்து ஸ்ரீ ஸாயி பக்தர்களை காப்பாற்றுவார் ஸ்ரீ ஸாயி  (ஷீர்டி)

நம் கேள்விக்கு பதிலில் தருவார் ஸ்ரீ ஸாயி சரித்திரம்
கேளுங்கள் அல்லது படியுங்கள் ஸாயி சத்தியம் என்பதை உணருங்கள்
ஸத் சங்கமம் செய்யுங்கள் ஸாயி ஸ்வப்பனத்தில் தோன்றுவாரே
பாரபட்சத்தை விடுங்கள் ஸாயியே நமது ஸத்குரு  (ஷீர்டி)

வந்தனமய்யா பரமேசா ஆபத்பாந்தவா ஸாயீஸா
எங்கள் பாவங்களை கரையேற்றி மனதில் உள்ள கோரிக்கையை நிறைவேற்று
கருணாமூர்த்தி ஓ ஸாயி கருணையோடு எங்களை கரையேற்று
எங்கள் மனமே உன் ஆலயம் எங்கள் சொற்களே உனக்கு நைவேத்தியம்  (ஷீர்டி)

ஸ்ரீ ஸச்சிதானந்த ஸமர்த்த ஸத்குரு ஸ்ரீ ஸாயிநாத் மஹராஜ்கீ ஜய்!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

 
மேலும் சீரடி சாயி பாபா வழிபாடு »
temple
சப்த சப்தாஹா சாயி சரித்திர பாராயண விவரம் : துர்லபம் த்ரயேமே வைதத், தெய்வானுக்கிரக ஹேத்துகம் ... மேலும்
 
temple
1. இப்பூஜையை சுயமாகவோ அல்லது ஆச்சார்யரை நியமித்தோ செய்யலாம். ஆனால் சுயமாக செய்யும் போது நம் கவனம் ... மேலும்
 
temple
ஸாயிபாபா ஸர்வாந்தார்யாமி, (எங்கும் வியாபித்திருப்பவர்) முற்றும் அறிந்த ப்ரஹ்ம ஞானி, பஞ்ச பிட்சகர் (ஒரு ... மேலும்
 
temple
சாயி ஸத் சரித்திர பாராயணம் என்றால் சாயிநாதரை ஆராதனை செய்வதாகும். சாயி நாதரின் மறு நாமமாக ஸத் ... மேலும்
 
temple
ஆரத்தி - ஒரு அறிமுகம்

ஆரத்தி என்றால் தமிழ் நாட்டில் புதுமணத் தம்பதிகளை வரவேற்க, போட்டிகளில்  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.