ஒரு கணவன் தன் மனைவியை இவ்வாறு வாழ்த்தக் கூடாது. மற்றவர்கள்தான் ஒரு பெண்ணை இவ்வாறு வாழ்த்தவேண்டும். குசேலர், ஒருமுறை இப்படித் தான் தன் மனைவியை தெரியாமல் வாழ்த்திவிட்டார். காரணம், இது தன்னைத்தானே வாழ்த்தியதற்கு சமம். அதாவது, தன் மனைவி முந்திவிடவும், தான் தொடர்ந்து வாழ வேண்டும் என்றும் அர்த்தமாகி விடும். ஒருவேளை, கணவன் முந்திவிட்டால், அந்தப் பெண் மாங்கல்யத்தை கழற்றும் அபாக்கிய நிலைக்கு வந்து விடுகிறாள். அது அவள் மனதை வேதனைப்படுத்தும். அதனால் தான் தீர்க்க சுமங்கலியாய் இரு என்று மங்களகரமாய் வாழ்த்துகிறார்கள்.