பதிவு செய்த நாள்
11
நவ
2013
02:11
செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்ட மேஷராசி அன்பர்களே!
நீங்கள் கடந்த மாதத்தைவிட முன்னேற்றம் காண்பீர்கள். சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். அவர் டிச.4ல் 9-ம் இடத்தில் இருந்து 10-ம் இடத்திற்கு செல்வதால் அவரால் முன்போல் நன்மை செய்ய முடியாது.செவ்வாய் 5-ம் இடமான சிம்மத்தில் இருந்தாலும், ராசிநாதன் என்பதால் அவர் இந்த இடையூறு உண்டாகாது. நவ.30ல் செவ்வாய் 6-ம் இடமான கன்னிக்கு சென்று நன்மை தருவார். பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் தொல்லை நீங்கும். அபார ஆற்றல் பிறக்கும். நகை வாங்குவீர்கள். புதன் 7-ம் இடத்தில் இருப்பதால் குடும்பத்தில் குழப்பம் நிலவும். ஆனால் புதன் நவ.28ல் 8-ம் இடத்திற்கு செல்வதால் முயற்சியில் வெற்றி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.நவ.28 க்கு பிறகு புதிதாக சொத்து வாங்க யோகம் கூடி வரும்.செவ்வாயாலும், புதனின் பலத்தாலும் நவ.28க்குப் பிறகு வேலையில் பளிச்சிடுவீர்கள்.தொழிலில் மாத பிற்பகுதியில் பிரச்னை நீங்கி வளர்ச்சி வேகம் அதிகரிக்கும். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்கலைஞர்கள் சிறப்பான முன்னனேற்றம் காண்பர். மதிப்பு, பாராட்டு கிடைக்கும். டிச.4க்குப் பிறகு பிறகு புதிய ஒப்பந்தம் பெறுவதில் தாமதம் உண்டாகும். மாணவர்கள் சிறப்படையலாம். தேர்வு முடிவுகள் பலருக்கு எதிர்பார்த்த படி அமையும். விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். மாத பிற்பகுதியில் கால்நடை மூலம் சிறப்பான பலன் கிடைக்கும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் எண்ணம் நிறைவேறும்.பெண்கள் ஆடம்பர பொருட்களை வாங்கலாம். மாத பிற்பகுதியில் குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். சூரியனால் உடல் நலம் பாதிக்கப்படும்.
அதிர்ஷ்ட எண்: 4,5 நிறம்: சிவப்பு, பச்சை
நல்லநாள்: நவ.17, 20,21,22,28,29,30,டிச.1,6,7,8,9,10,13,14
கவனநாள்: டிச.2,3 சந்திராஷ்டமம்
வழிபாடு: புதனன்று குலதெய்வம், சாஸ்தாவை வணங்கி பாசிப்பயறு தானம் செய்யுங்கள். பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி வழிபடுங்கள்.