பதிவு செய்த நாள்
09
அக்
2013
06:10
எதிர்நீச்சலையே பழக்கமாகக் கொண்ட மீன ராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் குரு, தற்போது 4ம் இடத்தில் இருப்பது சாதகமானது அல்ல என்றாலும், அவர் ராசி நாயகன் என்பதால் அவரால் கெடுபலன் வராது. அவர் அக், 22ல் வக்கிரம் அடைவது உங்களுக்கு சாதகமானது. ஒருகிரகம் வக்கிரம் அடையும் போது அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சாதகமற்ற குருவால் சிறப்பாக செயல்பட முடியாது அல்லவா! எனவே குருவால் கெடுபலன்கள் நடக்காது. மாறாக அவருக்கே உரித்தான நன்மைகளை தரவும் தவறமாட்டார். உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் சூரியன் இருப்பதால் அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவுசெலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். உடல் நலம் பாதிக்கும்.சூரியனோடு கல்விகாரன் புதன் இணைந்து இருப்பது சிறப்பானது தான். புதன் அங்கிருந்து உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். ஆனால், அவர் அக். 24 முதல் நவ. 14 வரை வக்கிரம் அடைகிறார். அப்போது அவர் 7ம் இடத்திற்கு செல்வதால் குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவி வகையில் பிரிவு ஏற்படலாம். மனக்கவலை ஏற்படும்.சுக்கிரன் 9ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் சுகம் கிடைக்கும். பொருளாதார வளம் கூடும். அக்.31ல் அவர் தனுசு ராசிக்கு செல்வதால், எதிரிகளால் தொல்லை அதிகரிக்கும். அவப்பெயர் வரலாம்.பூமிகாரகன் செவ்வாய் 6ம் இடத்தில் இருப்பது சிறப்பானது . இதனால் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை, ஆபரணங்கள் வாங்கலாம்.சனியும், ராகுவும் சாதகமாக இல்லை என்றாலும், அவர்கள் மீது குரு பார்வை படுவதால் அவர்கள் உங்களுக்கு கெடுபலனை தரமாட்டார்கள். விரைவாக சூழலும் கிரகங்களால் இந்த மாதம் சிறப்பாக முன்னேற்றத்தை காணலாம்.
நல்ல நாட்கள்: அக்.18, 21,22,23,29,30,31,நவ.1,2,7,8,9,10, 13,14
கவன நாட்கள்: நவ.3,4
அதிர்ஷ்ட எண்கள்: 2,3. நிறம்: பச்சை
வழிபாடு: கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். வியாழக் கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து கொண்டை கடலை தானம் செய்யலாம். சிவனை வழிபடுங்கள்.