பதிவு செய்த நாள்
11
நவ
2013
02:11
புதனை ஆட்சி நாயகனாக கொண்ட மிதுன ராசி அன்பர்களே!
ராசிக்கு 5-ம் இடமான துலாமில் புதன் இருப்பது சுமாரான நிலை. குடும்பத்தில் பிரச்னை வரலாம். எனவே விட்டுக் கொடுத்து போகவும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் அதிகரிக்கும். அவர் நவ.28ல் விருச்சிகத்திற்கு செல்கிறார். அவரால் பொருளாதார வளம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். சுப நிகழ்ச்சியை நடத்துவீர்கள். பதவி உயர்வு உண்டாகும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.சுக்கிரன் 7-ம் இடமான தனுசில் இருக்கிறார். இதனால் பெண்கள் வகையில் தொல்லை வரலாம். அவர் டிச.4ல் 8-ம் இடத்திற்கு செல்கிறார். இது சிறப்பான இடம். பணவசதி பெருகும். பெண்கள் ஆதரவுடன் இருப்பர். செவ்வாயால் பக்தி மேம்படும். ஆனால் அவர் நவ.30ல் கன்னி ராசிக்கு வருகிறார். அதனால் நண்பர்களால் அவதியுறலாம். கவனம் தேவை.விருச்சிகத்தில் இருக்கும் சூரியனால் எதிரியை முறியடிப்பீர்கள். பொருளாதார வளம் கூடும். சமூகத்தில் மதிப்பு உயரும். குரு உங்கள் ராசியில் இருப்பதால் நன்மை தரமாட்டார். ஆனால் அவரது பார்வைகளால் நன்மை கிடைத்துக் கொண்டிருக்கிறது. எது எப்படி அமைந்தாலும் முக்கிய கிரகங்களில் ஒன்றான கேது 11-ம் இடத்தில் இருந்து வெற்றியை அள்ளித் தருகிறார்.கலைஞர்கள் டிச.4க்குப் பிறகு புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெற்று வளம் காண்பர். நற்பெயர் கிடைக்கும். அரசியல்வாதிகள் சிறப்பான நிலையில் காணப்படுவர். மாணவர்கள் இந்த மாதம் கல்வி வளர்ச்சி காண்பர். புதனால் நவ.28க்குப் பிறகு நல்ல முன்னேற்றம் காணலாம். ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். விவசாயிகள் நவீன உத்தியைப் பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்தலாம். நவ.30க்குள் புதிய சொத்து வாங்கலாம்.பெண்களுக்கு அக்கம் பக்கத்தினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். நவ.28க்குப் பிறகு சுப நிகழ்ச்சி கைகூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நவ.30க்கு பிறகு செவ்வாயால் உடல் நலம் பாதிப்பு வரலாம்.
அதிர்ஷ்டஎண்: 3,9 நிறம்: செந்தூரம், பச்சை
நல்ல நாள்: நவ.17,20,21,22,25,26,27,டிச.2,3,4,5,11,12,13,14
கவன நாள்: டிச.6,7 சந்திராஷ்டமம்
வழிபாடு: பெருமாள், ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள். சனியன்று சனிபகவானுக்கும், வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கும் அர்ச்சனை செய்யுங்கள்.