பதிவு செய்த நாள்
11
நவ
2013
02:11
சந்திரனை ஆட்சி நாயகனாக கொண்ட கடக ராசி அன்பர்களே!
செவ்வாய் 2ம் இடமான சிம்மத்தில் இருக்கிறார். அங்கு அவரால் பகைவர் வகையில் தொல்லை வரும். பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. அதே நேரம் நவ.30 முதல் செவ்வாய் 3ம் இடமான கன்னி ராசிக்கு சென்று நன்மை தருவார். பக்தி உயர்வு மேம்படும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிகாணலாம். பொருளாதார வளம் மேம்படும்.சூரியன் உங்கள் ராசிக்கு 5ம் இடமான விருச்சிகத்தில் இருக்கும் போது பகைவர்கள், வியாதி தொல்லை இருக்கும். புதனால் மாதத் தொடக்கத்தில் பொருள் சேரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். நவ.28ல் அவர் 5-ம் இடமான விருச்சிக ராசிக்கு வந்து நற்பலனை கொடுக்க முடியாது. குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம். சுக்கிரனாலும் முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். டிச.4க்கு பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் வரலாம். ஒதுங்கி இருக்கவும்.முக்கிய கிரகங்கள் எதுவுமே சாதமாக அமையவில்லை. 4ம் இடத்தில் சனிபகவானும், ராகுவும் இணைந்திருப்பது சில பிரச்னைகளை தரலாம். ஆனால், சனிபகவானின் பார்வையால் நன்மை கிடைக்கும். குருபகவான் 12ம் இடத்தில் இருப்பதும், கேது 10-ம் இடத்தில் இருப்பதும் சிறப்பானது அல்ல கேதுவால் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். எதிரிகளின் தொல்லை ஏற்படும். பயணத்தின் போது கவனம் தேவை.கலைஞர்கள் மனதில் சோர்வு ஏற்படும். டிச.4க்குப் பிறகு பெண்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். அரசியல்வாதிகள் மனதிருப்தியோடு காணப்படுவர். மாணவர்கள்போட்டிகளில் வெற்றி காணலாம். நவ.28 க்குப் பிறகு அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். விவசாயம் வேலைப்பாடு அதிகமாக இருந்தாலும் வருமானம் குறையாது. நவ.30க்குப் பிறகு புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு. பெண்களிடம் அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். நவ.30க்குப் பிறகு நல்ல பலன்கள் நடக்கும்.
அதிர்ஷ்ட எண்: 2,5 நிறம்: வெள்ளை, சிவப்பு
நல்ல நாள்: நவ.17,18,19, 23,24, 28,29, டிச.4,5, 6,7, 13,14,15.
கவன நாள்: டிச.8,9,10 சந்திராஷ்டமம். அனாவசிய வாக்குவாதம் தவிர்க்கவும்.
வழிபாடு: காலையில் சூரியனை வழிபடுங்கள். வியாழக்கிழமை4 தட்சிணாமூர்த்தியை வழிபட தவறாதீர்கள். துறவிகளுக்கு காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள்.