பதிவு செய்த நாள்
11
நவ
2013
02:11
சுக்கிரனை ஆட்சி நாயகனாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே!
குருபகவானும், சுக்கிரனும் நன்மை தருவார்கள். உங்கள் ராசி நாயகன் சுக்கிரன் 3-ம் இடத்தில் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். டிச.4ல், சுக்கிரன் 4-ம் இடத்திற்கு சென்றபின், மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினரிடம் சுமூக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும்.சூரியன் உங்கள் ராசிக்கு 2ம் இடத்தில் இருக்கிறார். சூரியன் இந்த இடத்தில் இருக்கும்போது பொருள் விரயம் ஏற்படும். கண் வலி வரலாம். புதன் மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் இருக்கிறார். இவரால் வீட்டினுள் சில பிரச்னை, உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். பொருள் இழப்பு ஏற்படலாம். பணியாளர்கள் இடமாற்றம் அடைவர். டிச.4ல் புதன் 2ம் இடத்திற்கு செல்கிறார். அதன்பின் குடும்பத்தில் அனுகூலங்கள் ஏற்படும். ராசிக்கு நட்பு கிரகமான செவ்வாய் 11ம் இடமான சிம்மத்தில் உள்ளார். இது சிறப்பான இடம். அவரால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மேலும் செவ்வாயின பலத்தால் நவ.30க்குள் புதிய நிலம், வீட்டு மனை வாங்கலாம். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றத்தை காண்பர். கலைஞர்களுக்கு விருது கிடைக்கும். அரசியல்வாதிகள் கவுரவத்தோடு காணப்படுவர். உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். மாணவர்களில் பெரும்பாலானோருக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் சிரத்தை எடுத்தால் வெற்றி கிட்டும்.விவசாயிகள் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் காணலாம். சொத்து வாங்கலாம். பசு வளர்ப்பில் நல்ல வருவாய் கிடைக்கும். பெண்கள் உற்சாகமான நிலை அடைவர்.
அதிர்ஷ்ட எண்: 4,8. நிறம்: மஞ்சள்,வெள்ளை.
நல்ல நாள்: நவ.17, 23,24,25,26,27, 30, டிச.1, 4,5, 11,12,13,14.
கவன நாள்: நவ.18,19, டிச.15 சந்திராஷ்டமம். அனாவசிய வாக்கு வாதம் தவிர்க்கவும்.
வழிபாடு: ராகு சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அவருக்கு உளுந்து படைத்து அர்ச்சனை செய்யுங்கள். ராகு காலத்தில் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும். மேலும் துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.