பதிவு செய்த நாள்
12
நவ
2013
10:11
பழநி: பழநி மலைக் கோயிலில் திருக்கார்த்திக திருவிழா, நேற்று காப்புகட்டுதலுடன் துவங்கியது. பழநி கோயிலில் நவ.,11 முதல் 17 வரை கார்த்திகை திருவிழாழநடக்கிறது. நேற்று மாலை சாயரட்சை பூஜையை தொடர்ந்து, மூலவர், சின்னக்குமார சுவாமி, சண்முகர், வள்ளி தெய்வானை, துவாரபாலகர்கள், விநாயகர், மயிலுக்கு காப்புக்கட்டுதல் நல்து. விழா நாட்களில் உட்பிரகாரத்தில் யாகசாலை பூஜை, சண்முகார்ச்சனை, மகா தீபாராதனை நடக்கிறது. சின்னக்குமாரசுவாமி, தங்கசப்பரத்தில் திருவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நவ.,17 ல், திருக்கார்த்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, மாலை 4.30 மணிக்கு சின்னக்குமாரசுவாமி தங்கமயில் வாகனத்திவ் எழுந்தருளலும், மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றுதல் நடக்கிறது.
ரோப்கார் இன்று நிறுத்தம்: பழநிகோயில் ரோப்கார் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று ஒருநாள் மட்டும் நிறுத்தப்படவுள்ளது. பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் வசதிக்காக காலை 7 முதல் இரவு 8.30 மணி வரை ரோப்கார் இயக்கப்படுகிறது. பராமரிப்பு பணிக்காக இன்று நிறுத்தப்பட்டு, உருளை, கம்பிவடக்கயிறு போன்றவற்றில் ஆயில், கிரிஸ் மாற்றப்படுகிறது. இன்றே பணிகள் முடிக்கப்பட்டு, நாளை வழக்கம் போல் ரோப்கார் பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படும், என, பழநி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.