திருவண்ணாமலை தீப திருவிழா: கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் திருவீதி உலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2013 10:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா நேற்று நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவின், 5ம் நாள் திருவிழா நேற்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து சந்திரசேகரர், அண்ணாமலையார் கோவிலில் உள்ள, 16 கால் மண்டபத்தில்ல எழுந்தருளி கண்ணாடி ரிஷப வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்தார். இரவு, பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், அண்ணாமலையார் சமேத உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர், ரிஷப வாகனத்தில் வீதிஉலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமியை வழிபட்டனர்.