குன்றத்து மலையில் போலீஸ் பாதுகாப்பு நவ. 17ல் கார்த்திகை தீபம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2013 10:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைமேல் நவ., 17ல் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு, மலைமேல் தீபத்தூணிற்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் கோயில் சார்பில், மலைமேலுள்ள உச்சி பிள்ளையார் மண்டபத்தின் மேல் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். ஆனால், மலை உச்சியிலுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. சில நாட்களுக்கு முன், இந்து முன்ணனி மாநில தலைவர் அரசுராஜா, மலைமேலுள்ள காசிவிஸ்வநாதரை தரிசிக்க சென்றபோது கைது செய்யப்பட்டார். இதனால் பதற்றத்தை தடுக்கவும், தீப தூணில் தீபம் ஏற்றாமல் தடுக்கவும், நேற்றுமுதல் தீபதூணிற்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.