பதிவு செய்த நாள்
14
நவ
2013
11:11
சிதம்பரம்: நெல்லுக்கடைத் தெரு சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் நேற்று துவங்கியது. சிதம்பரம் நகர் நெல்லுக்கடைத் தெரு மரகத சித்தி விநாயகர் கோவிலில் உள்ள அருளாம்பிகை, அனுக்கிரக ஈஸ்வரர், சர்ப்பதோஷஹரர், வீரப்பெருமாள், முருகர், அய்யப்பன், நவக்கிரகம் ஆகிய சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டும், புதியதாக ஜெயதுர்க்கை அம்மன், ஆஞ்சநேயர் சன்னதிகள் அமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் இன்று காலை 9 மணிக்கு நடக்கிறது. இதனையொட்டி கோவில் வளாகத்தில் யாககுண்டம் அமைக்கப்பட்டு அனுக்ஞை, விநாயகர் பூஜையுடன் யாக பூஜை ஹோமம் துவங்கி, அனைத்து சிறப்பு யாகங்கள் நடந்தது. மாலை 7 மணிக்கு முதல் யாகசாலை பூஜைகள், பூர்ணாஹூதி, மகா தீபாராதனைகள் நடக்கிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை 2ம் கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு 8.30 மணிக்கு பூர்ணாஹூதி, மகா தீபாராதனைகள் நடக்கிறது. பின்னர் கடம் புறப்பாடு செய்து காலை 9.45 மணிக்கு கோவில் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனைதொடர்ந்து பரிவார மூர்த்திகள் விமானம் கும்பாபிஷேகம் நடக்கிறது. மதியம் மரகத சித்தி விநாயகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் மகா அபிஷேகம், சிறப்பு தீபாராதனைகள் நடக்கிறது.